நடிகை கஸ்தூரி தற்போது டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். சமூகம், அரசியல் சார்ந்த பல விவகாரங்களுக்கும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட கவிஞரும், திமுக ஆதரவாளருமான மனுஷ்யபுத்திரனுடன், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கஸ்தூரி மோத அது பெரும் பரபரப்பை கிளப்பியது. அவருக்கு எதிராக மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதை எழுத, தன் பங்குக்கு கஸ்தூரியும் ஒரு கவிதை எழுதி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாருடன் சிரித்து பேசும் சில புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியானது. அது உண்மையில்லை. வெட்டி ஒட்டப்பட்டது என சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், இதுகுறித்து ஒரு டிவிட்டர் வாசகர் எழுப்பிய கேள்விக்கு, அண்ணன் தங்கை பேசுவதையும், அருவருப்பாக சித்தரிக்கும் விஷமிகள் இங்கே இருக்கிறார்கள் என கஸ்தூரி பதிலளித்துள்ளார்.