சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் பொருளாதாரரீதியாக இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் மேலும் மோதல் அதிகரித்துள்ளது. தென்சீன கடலில் அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் தகவல்களை திருடுவதாக டெக்ஸாசில் உள்ள சீன தூதரகம் மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அமெரிக்க கொடியை கீழிறக்கியது சீனா. இந்நிலையில் தற்போது அமெரிக்க போர் உளவு விமானங்கள் சீனாவின் பல பகுதிகளில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்சீன கடலில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் நுழைந்திருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.