மலேசியாவில் உள்ள வடகொரியினர் நாட்டை விட்டு வெளியேற திடீர் தடை

செவ்வாய், 7 மார்ச் 2017 (22:56 IST)
வடகொரிய அதிபரின் சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் மர்மமான முறையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் இருநாட்டின் நல்லுறவை பாதித்துள்ளது.




அதிபரின் கொலை குறித்த விசாரணையில் வடகொரியாவின் தூதர் அதிருப்தி தெரிவிக்க இதற்கு அதிரடியாக தூதரை நாட்டை விட்டு வெளியேற மலேசிய அரசு உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக வடகொரியாவில் இருந்து மலேசிய தூதர் வெளியேற்றப்பட்டார்

இந்நிலையில் வட கொரியாவில் வாழும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டார். மலேசியாவில் இருக்கும் தங்கள் நாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது என்றும் வட கொரியா தெரிவித்தது.

இதற்கும் பதிலடியாக மலேசியாவில் தங்கியுள்ள வட கொரியா நாட்டினரை தாய்நாட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மலேசிய துணை பிரதமர் அஹமத் சாஹித் ஹமிதி அறிவித்துள்ளார். இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்