அண்ணன் பிரதமர் ... தம்பி அதிபர் ... இலங்கையில் இனி ராஜபக்சக்களின் ஆட்சி !

புதன், 20 நவம்பர் 2019 (18:14 IST)
இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் ராஜபக்‌சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ச  வெற்றி பெற்று அந்த நாட்டின் அதிபரானார்.
இந்நிலையில், அந்த நாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இலங்கையின் புதிய அதிபராகிறார் மகிந்த ராஜபக்ச.
 
இவர், கடந்த 2005 முதல் 2015 வரை இலங்கையின் அதிபராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில்,  விடுதலைப் புலிக்களுக்கும் சிங்கல ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில்  விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட  பல்வேறு ஈழத் தமிழக மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு அண்ணன் ராஜபக்‌ச பிரதமராக சர்வ அதிகாரங்களுடன், வலம்வர தம்பி கோத்தபய ராஜபக்ச அண்ணனுக்கு உதவியாக அரசியல் காய்கள் நகர்த்துவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவ்விருவரின் ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் அனைவரின்  வேண்டுகோளாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்