இன்னும் 4 மாசத்திற்கு சூரியனையே பாக்க முடியாது..! – அண்டார்டிகாவில் Long Night!

செவ்வாய், 17 மே 2022 (08:58 IST)
பூமியின் தென் துருவ பகுதியான அண்டார்டிகா லாங் நைட் எனப்படும் நீண்ட இரவுக்குள் சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் தென் துருவ பகுதியில் அமைந்துள்ளது அண்டார்டிகா கண்டம். மிகப்பெரும் கண்டமான இது உலகின் மிகப்பெரிய பனி பாலைவனமாகவும் இருந்து வருகிறது. இங்கு மனிதர்கள் வசிக்க முடியாத சூழல் உள்ளது.

அதனால் ஆராய்ச்சிக்காக சில ஆய்வாளர்கள் மட்டுமே அண்டார்டிகா சென்று தங்குகின்றனர். தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள். தற்போது அண்டார்டிகாவில் நீண்ட இரவு தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்