இறந்த நிலையில் கரை ஒதுங்கும் உயிரினங்கள்: பேரிடரின் அறிகுறியா??

வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:56 IST)
இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக பாம்புகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குவதாக தெரியவந்துள்ளது.


 
 
இலங்கையின், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதியில் பாம்புகள் கரை ஒதுங்குவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
முக்குலியான் என அழைக்கப்படும் ஒருவகை பாம்புகள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இந்த பாம்புகள் ஒரு அடி நீளத்திலிருந்து, இரண்டரை அடி நீளம் வரை காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த பாம்புகள் கால நிலை மாற்றத்தினால் உயிரிழந்து கரையொதுங்கி இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் போது இவ்வாறு இறந்த நிலையில் மீன்கள் மற்றும் பாம்புகள் கரை ஒதுங்கி இருந்தன.
 
தற்போதும் அதே போல பாம்புகள் கரை ஒதுங்குவதால் மீண்டும் ஒரு இயற்கை பேரிடர் ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்