Google மேப் பேச்சை கேட்டு... ஆற்றில் மூழ்கிய நபர் !

வியாழன், 13 பிப்ரவரி 2020 (21:05 IST)
Google மேப் பேச்சை கேட்டு... ஆற்றில் மூழ்கிய நபர்

இன்று , புது இடத்திற்குச் சென்றால் வழி தெரியவில்லை என்றால்  அதைப் பற்றி கவலைப் படாமல், கூகுள் மேப்பின் உதவியால் எந்த வழியையும் குறுக்குத் தெருவையும் கண்டறிய முடியும். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.ஆனால், அதே கூகுள் மேப்பின் பேச்சைக் கேட்டு ஒரு நபர் ஆற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் உள்ள மினியாப்பொலிஸ் என்ற பகுதியில்  வசித்து வரும் ஒருவர் தான் செல்ல வேண்டிய பகுதி குறித்து, கூகுள் மேப்பில் கேட்டுள்ளார். அதற்கு மிசிசிப்பியின் சில பகுதி உள்ள ஒரு ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கூகுள் சொன்னபடி கேட்டு ஆற்றில் மூழ்கியுள்ளார். 
 
அதன்பின்னர் அவரை மீட்ட போலீஸார் அவரிடம் விசாரித்த போது, கூகுள்  மேப்பை நம்பி வைராக்கியத்துடன் சென்றேன். அதனால் ஆற்றில்  விழுந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு பொலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
 
ஏனென்றால் மிசிசிப்பியில் இன்னும் சரியாம கூகுள் மேப் வரையறுக்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்