உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.
அந்த செய்தியில் ‘ கடந்த மாதம் கிராமப்புறம் ஒன்றிற்கு சென்ற கிம்முக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஸ்டண்ட் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவரின் கை நடுக்கத்தால் அறுவை சிகிச்சையில் குழப்பம் ஏற்பட்டு கிம்மின் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் கோமா நிலையில் இருக்கலாம்' எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஜப்பான் நாளேட்டின் இந்த செய்திக்கும் எந்தவொரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.