ஜாலியாக ஊர் சுற்றிய மக்கள்: ஊரடங்கு போட்ட ஜோர்டான்!

சனி, 21 மார்ச் 2020 (13:40 IST)
கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் ஜாலியாக ஊர் சுற்றிய மக்களை ஊரடங்கு போட்டு வீட்டில் அடைத்துள்ளது ஜோர்டான்.

உலகம் முழுவதும் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், மெல்ல மீண்டுள்ளது. ஆனால் இத்தாலி மிக தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கண்ட உலக நாடுகள் மிக வேகமாக தங்களது மக்களை வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜோர்டானும் தனது மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் ஜோர்டானில் மக்களுக்கு கொரோனா இன்னமும் தீவிரமடையாததால் மக்கள் அலட்சியமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் சகஜமாகவே இருந்து வந்துள்ளனர். இதனால் ஜோர்டான் அரசாங்கமே காலவரையற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அவசரமான காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றினால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மக்கள் வைரஸின் ஆபத்தை உணராமல் செயல்படுவதால் அரசே இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜோர்டானின் செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்