ஜோ பைடன் ரஷ்யாவுக்குள் நுழைய தடை! – ரஷ்ய அதிபர் அதிரடி!

ஞாயிறு, 22 மே 2022 (11:47 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருவதால் அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா – உக்ரைன் இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போரால் இருதரப்பு ராணுவ வீரர்களுமே தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்த போரில் ரஷ்யாவை எதிர்த்து உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.

சமீபத்தில், போரினால் பாதிப்படைந்த உக்ரைனுக்கு அமெரிக்கா 40 பில்லியன் டாலர்கள் நிதியை அளித்தது. இதனால் அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டின் பிளிங்கன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்