கப்பலில் தத்தளிப்பவர்களுக்கு ஐபோன்: ஜப்பான் அரசின் நோக்கம் என்ன?

திங்கள், 17 பிப்ரவரி 2020 (14:42 IST)
ஜப்பானின் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசு 200 ஐபோன்களை அனுப்பி வைத்துள்ளது. 
 
ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.  இக்கப்பல் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பிய போது, அக்கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஜப்பான் துறைமுகத்தில் இந்த கப்பலுக்கு அனுமதிக்க மறுத்தனர்.  
 
இந்நிலையில் தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக உள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. மேலும் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்டு சென்றுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். 
இதனிடையே, கப்பலில் உள்ளவர்களுக்கு தகவல் தொடர்பில் உதவும் விதமாக 2000 ஐபோன்களை ஜப்பான் அரசு அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு வழங்கி உள்ளது. அந்த ஐபோனில் ஜப்பான் சுகாதார துறை உருவாக்கிய செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 
 
அங்கிருப்பவர்கள் என்ன மருந்து எடுத்து கொள்ள வேண்டும், மனநல ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகள் போன்ற தகவல்கள் அந்த செயலி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்