ஜப்பானில் 250 கி.மீ. வேக புயல்: மரங்கள் கட்டடங்கள் சாய்ந்தன

புதன், 9 ஜூலை 2014 (14:10 IST)
ஜப்பானின் 252 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள் கட்டடங்கள் சாய்ந்தன.

ஒகினாவா தீவுகளில் செவ்வாய்க் கிழமையன்று புயல் காரணமாக, அப்பகுதியில் பல கட்டடங்கள் சாய்ந்து சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காற்றின் வேகத்தில், சாலைகளில் இருந்த சிக்னல் கம்பங்கள் தூக்கி வீசப்பட்டன.

"நியோகுரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தொடர்பான சம்பவங்களில், 83 வயது பெண் ஒருவர் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பகுதியில், படகில் சென்ற 62 வயதுடைய ஒருவர் படகிலிருந்து தூக்கி வீசப்பட்டு, காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக ஒகினாவா தீவுகளில் சுமார் 70 ஆயிரம் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானம், கப்பல் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த நியோகுரி புயலின் தாக்கம் அதிக அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டதால், ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரும் விமானப்படைத் தளமான கடெனாவில் இருந்து சில விமானங்கள் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு சுமார் 6 லட்சம் பேருக்கு, பாதுகாப்பான இடங்களுக்க செல்ல அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்