ஜப்பானில் கடந்த 1963ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தபோது டோக்கியோவில் உள்ள அரசின் பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள், மந்திரி உள்ளிட்ட பலரை சுட்டுக் கொன்றனர். அதுமுதலாக அவர்களது ஆவி அந்த வீட்டிலேயே சுற்றி திரிவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.
அதனால் இதுவரை பதவியேற்ற எந்த ஜப்பான் பிரதமரும் அதிகாரப்பூர்வமான அந்த பிரதமர் இல்லத்தில் தங்கியது இல்லை. இந்நிலையில், புதிதாக பதவியேற்ற புமியோ கிஷிடோ பலரது அறிவுரைகளையும் மீறி அந்த வீட்டில் சென்று தங்கியுள்ளார். அங்கு ஒருநாள் இரவை கழித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் “நேற்று இரவு நான் நன்றாக தூங்கினேன். அங்கு எந்த பேய், பிசாசையும் நான் பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.