சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை! அரசின் அதிரடி அறிவிப்பு..!

Siva

திங்கள், 4 நவம்பர் 2024 (15:59 IST)
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் ஆறு மாதம் சிறை தண்டனை என்று அந்நாட்டு அரசு அதிரடியாக சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் மக்கள் பெரும்பாலும் சைக்கிள் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்தி வருவதால், சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சைக்கிள் ஓட்டும் போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால், சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் நிகழ்ந்ததால், சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சைக்கிள் ஓட்டும்போது பெரும்பாலோர் மொபைல் பயன்படுத்துவதாகவும் அதன் காரணமாக விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

மேலும், சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பேசவோ அல்லது இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இந்த விதியை மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ஐம்பது ஆயிரம் யென் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மது போதையில் சைக்கிள் ஓட்டினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை எனும் புதிய திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்