இஸ்ரேல் போர் நிறுத்தம்; 17 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:25 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து பணைய கைதிகளை விடுவித்து வருகிறது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த மாதம் முதலாக போர் நடந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர், வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் தலையீட்டின் பேரில் போர் நிறுத்த அழுத்தங்களும் இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

போரை நிறுத்த ஹமாஸ் கடத்தி சென்ற பணையக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் 13 பணையக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதனால் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தற்போது 17 பணைய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டு பணைய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், போர் நிறுத்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்