இந்நிலையில் தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ், தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக் - சரண்டீ ஆகிய பகுதிகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர், இங்கு பல் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கு சமீபத்தில் அகழ்வாராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு, மண்ணில் புதையுண்ட 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 140- மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்பு வகை என்றும் அது தாவர உண்ணி என்றும் கூறியுள்ளனர். இந்த செய்தி தற்போது வைரல் ஆகிவருகிறது.