மவுத் வாஷ் எல்லாம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாது – இந்திய நிபுணர்கள் கருத்து!

சனி, 21 நவம்பர் 2020 (15:25 IST)
கொரோனா தொற்று பரவுவதை மவுத் வாஷ்கள் வெகுவாக குறைப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதை இந்திய நிபுணர்கள் மறுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அச்சம் இன்று வரை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மவுத்வாஷ்கள் பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் கொல்லப்படுவதாகவும் இதனால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மவுத் வாஷ் பயன்படுத்த சொல்லி பரிந்துரைத்தனர்.

ஆனால் இதை இந்திய நிபுணர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ‘கொரோனா வைரஸ் வாய்வழியாக மட்டும் இல்லாமல் மூக்கு மற்றும் கண் வழியாகவும் பரவும் என்பதால் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது’எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்