கொரோனா தடுப்பு மருந்து: பிஃபிசர், பயோஎன்டெக் அமெரிக்காவின் அனுமதிக்கு விண்ணப்பம்

சனி, 21 நவம்பர் 2020 (15:04 IST)
அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன.
 
இந்த மருந்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பாதுகாப்பானது தானா என்பதை தீர்மானிப்பது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (எஃப்.டி.ஏ) என்ற அமைப்பின் பணி.
 
இந்த எஃப்.டி.ஏ அமைப்பு, இந்த மருந்தைக் குறித்து முழுமையாக படிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை, அமெரிக்க அரசு, வரும் டிசம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அனுமதிக்கலாம்.
 
இந்த மருந்தின் மேம்பட்ட சோதனையில் இருந்து கிடைத்த தரவுகள், இந்த மருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட 94% பேரைப் பாதுகாக்கிறது எனக் காட்டுகின்றன. பிரிட்டன், ஏற்கனவே இந்த மருந்தை 40 மில்லியன் டோஸ் முன் கூட்டி ஆர்டர் செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் மருந்து வந்து சேரும்.
 
அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவையை, கடந்த வியாழக்கிழமை, கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையே வெளிப்படுத்துகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, ஒரே நாளில் 2,000 பேருக்கு மேல் இறந்து இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்