முஸ்லிம்கள் கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகள் இல்லாதவகையில் இந்த ஆண்டு ரம்சான் மாதத்தில் மிக நீண்ட பகல்நேரத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் பள்ளி மாணவர்களுக்கு இது கடினமாக அமைகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் முஸ்லிம்கள் கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகள் இல்லாதவகையில் இந்த ஆண்டு ரம்சான் மாதத்தில் மிக நீண்ட பகல்நேரத்தை எதிர்கொள்கிறார்கள்.
அதனால் ரம்சான் நோன்புக்கால நேரமும் மிகநீண்டதாக அமைகிறது. குழந்தைகள், குறிப்பாக பரீட்சை எழுதும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு இது கடினமாக இருக்கிறது.
பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் இது குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
நோன்போடு பரீட்சை எழுதும் மாணவியை சந்தித்தது பிபிசி.