இஸ்ரேல், சவுதி அரேபியாவை குறி வைக்கும் ஈரான்!!

சனி, 23 செப்டம்பர் 2017 (15:26 IST)
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியாவை போல ஈரானும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.


 
 
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஈரான், உலக நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
 
நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் கோராம்ஷர் ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்துவது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்ததை மீறுவதாகும் என டிரம்ப் எச்சரித்த பின்னரும் ஈரான் இந்த செய்லில் ஈடுபட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை மூலம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்