கழுத்தில் டயரை மாட்டிக்கொண்ட முதலை: கழட்டிவிட்டால் பரிசு!

சனி, 1 பிப்ரவரி 2020 (14:05 IST)
இந்தோனேஷியாவில் கழுத்தில் பைக் டயரை மாட்டிக்கொண்டு திரியும் முதலையில் கழுத்திலிருந்து அந்த டயரை விடுவிப்பவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மத்திய சுலவெசி பகுதியில் 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று கழுத்தில் பைக் டயர் மாட்டிய நிலையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த முதலை கழுத்தில் டயரோரு முதன்முதலாக 2016ல் பாலு ஆற்றில் காணப்பட்டிருக்கிறது.

2018ல் இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி போன்றவை ஏற்பட்டபோதும் அந்த முதலை அதிலிருந்தெல்லாம் தப்பி இன்னமும் உயிரோடு இருக்கிறது. ஆனால் அதன் கழுத்தில் உள்ள டயரை மட்டும் அதனால் விடுவிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த இயற்கை உயிர்கள் பாதுகாப்பு அமைப்பு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அந்த முதலையின் கழுத்திலிருந்து டயரை விடுவிப்பவர்களுக்கு பெரிய தொகை பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் முதலையை காயப்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்