அமெரிக்காவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

புதன், 20 ஜூலை 2016 (13:39 IST)
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய மென்பொறியாளர், அவரது அறையில் தங்கியிருந்த நண்பரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சன்கீர்த். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பு முடிந்ததும், அங்கேயே தங்கி ஒரு வேலையில் சேர்ந்துள்ளர். 
 
இவர் கடந்த 18ஆம் தேதி அவரது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவருக்கும், இவரது அறையில் தங்கியிருந்த சாய்சந்திப் என்ற நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சந்தீப், சன்கீர்த்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
 
இந்த தகவலை சன்கீர்த்தின் பெற்றோர்களுக்கு, அவரின் நண்பர் தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவரின் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும், சன்கீர்த்தை கொலை செய்த சாய்சந்தீப்பை, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்