இந்தியருக்கு உணவு கொடுக்காத இந்திய ஓட்டல்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:52 IST)
அயர்லாந்தில் உள்ள ஒரு இந்திய ஓட்டலில் இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ரவிஸ் கிச்சன் எனும் இந்திய ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் இந்திய உணவுகளுக்காக புகழ்பெற்ற ஓட்டலாகும். இந்நிலையில் இந்த ஓட்டலுக்கு மையங் பட்நாகர் என்னும் இந்தியர் தன்னுடைய நண்பர்களுடன் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு எந்த பணியாளரும் வரவில்லை. உடனே அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் ஏன் எங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ”நீங்கள் இந்தியர்கள் ஆதலால் உங்களுக்கு உணவு இல்லை” என பதில் அளித்துள்ளார். இதனை கேட்டு கோபமுற்ற மையங், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு கொடுக்காத அந்த ஓட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ அபராதம் விதித்து, அந்த தொகையை மையங் பட்நாயருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்