உலக வங்கியின் தலைவராகிறார் இந்தியர்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரை

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:03 IST)
உலக வங்கியின் தலைவராகிறார் இந்தியர்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரை
உலக வங்கியின் தலைவராக இந்தியரான அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போதைய உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் என்பவர் வரும் ஜூன் மாதம் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவரது நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் கார்டு தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் இருந்த அஜய் பங்கா உலக வங்கியை மிகச் சரியாக வழி நடத்துவார் என்றும் அவரது தலைமையின் கீழ் உலக வங்கி சீராக இயங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் துணை அதிபராக இந்தியரான கமலா ஹாரிஸ் உள்ளார் என்று தெரிந்ததே. அது மட்டுமின்றி அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர் ஆன விவேக் என்பவர் போட்டியிட உள்ளார். 
 
மேலும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக சுந்தர் பிச்சை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாகலாம் ஆகியோர் ஆகிய இந்தியர்கள் பெரும் பதவிகள் உள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது உலக வங்கியின் தலைவராக இந்தியர் ஒருவர் பதவியேற்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்