சூப்பர் டாக்டர் சுரேஷ் கடசல்லி அமெரிக்காவில் சுட்டுக் கொலை

செவ்வாய், 16 ஜூன் 2015 (03:34 IST)
இந்தியா மருத்துவர் சுரேஷ் கடசல்லி அமெரிக்காவில், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
 

 
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் கடசல்லி, டெக்சாஸ் மாகாணம் ஒடிசாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரை பார்க்க வந்த நண்பர் அய்யாசாமி தங்கம் திடீரென்று சுரேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் கடசல்லியின் சொந்த ஊர் பெங்களூரு ஆகும். இவர், பெல்காம் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பின்பு, அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, ஒடிசா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
 
இவர், கடந்த 2005ஆம் ஆண்டு, ரோபோ மூலம் இதய தமனி பை - பாஸ் அறுவை சிகிச்சை செய்து உலக மருத்துவர்களிடையே பெரும் புகழ் பெற்றார். கூடவே, இதயத்தில் ஸ்டென்ட் சாதனத்தையும் ஒருங்கே பொருத்தி சாதனை படைத்தார். 
 
இவரது சாதனையை அங்கீகரித்து, டெக்சாஸ் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு இவருக்கு சூப்பர் டாக்டர் என்ற பட்டத்தை வழங்கியது குறிப்பிடதக்கது.
 
சாதனை நாயகன் மருத்துவர் சுரேஷ் கடசல்லி மரணத்திற்கு அமெரிக்க மருத்துவ உலகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்