அதை தொடர்ந்து, 246 ரன்கள் என்ற அபார இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 7 ரன்கள் மட்டுமே எடுத்து பிரோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராத் கோஹ்லி 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின், கே.எல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் சதம் அடித்தார். அவருடன் இணைந்து ஆடிய, ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய தோனி, கடைசி நேரத்தில் தன்னுடைய அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து, 1 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது, பிரேவோ வீசிய பந்தில் சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தன் முதல் டி20 வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.