ஆனால், தரையை தட்டி நிற்கும் இந்தப் பனிப்பாறை இரவில் நகரவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பனிப்பாறையில் வெடிப்புகளும், துளைகளும் ஏற்பட்டுள்ளதால், எந்நேரத்திலும் உடையலாம் என அஞ்சுகின்றோம் என்று கிராம கவுன்சில் உறுப்பினர் சுசான்னே எலியாஸ்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
இந்த கிராமத்தின் மின்சார நிலையமும், எரிபொருள் கிடங்குகளும் கடற்கரைக்கு அருகில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இவ்வாறான மிக பெரிய பனிப்பாறைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் அடிக்கடி நிகழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.