இந்நிலையில் இந்தியாவின் கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில்., நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; இந்தியாவில் கொரொனாவால் மக்கள் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிரானப் போராடும் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் விரையில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.