மிதக்கும் Jumbo Restaurant தென் சீன கடலில் மூழ்கியது!

செவ்வாய், 21 ஜூன் 2022 (17:37 IST)
ஹாங்காங்கின் அடையாளமான உலகப்புகழ் பெற்ற ஜம்போ மிதக்கும் உணவகம்  தென் சீன கடலில் மூழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜம்போ மிதக்கும் உணவகம் கடந்த 14 ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஜம்போ மிதக்கும் உணவகம், ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஹாங்காங் சுற்றுலாத்தலமாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த ஜம்போ மிதக்கும் உணவகம், கொரோனா பெருந்தொற்றால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது என கூறப்பட்டது. ஆனால், 2013 முதல் இது லாபகரமாக இல்லை என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த இழப்புகள் $12.7 மில்லியனை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. உணவகத்தின் பராமரிப்பு கட்டணம் மில்லியன் கணக்கில் செலவாகிறது எனவும் ஜூன் மாதத்தில் இதன் உரிமம் காலாவதியாகும் முன் ஜம்போ ஹாங்காங்கை விட்டு வெளியேற காத்திருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது.
 
கடந்த 1976 ஆம் ஆண்டு மறைந்த கேசினோ அதிபர் ஸ்டான்லி ஹோவால் திறக்கப்பட்டது.  சீன அரண்மனை போல வடிவமைக்கப்பட்டு, ஒரு காலத்தில் பார்க்க வேண்டிய அடையாளமாக கருதப்பட்ட இந்த உணவகம், ராணி எலிசபெத் II முதல் டாம் குரூஸ் வரை பார்வையாளர்களை ஈர்த்தது. இது பல படங்களில் இடம்பெற்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்