மெக்ஸிகோவில் உள்ள சிறுநகரம் குவாதாலஜாரா. மெக்ஸிகோ தேசமே அதிகமான வெயில் அடிக்கும், வறட்சியான தேசம்தான். இந்நிலையில் பனிப்புயல் ஒன்று அடித்ததால் அந்த நகரத்தின் சில பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு பனி நிறைந்துள்ளது.
புயலில் சிக்கிய இலை தழைகள் அந்த பனியோடு உறைந்து காணப்படுகின்றன. கார்கள், பாதைகள் அனைத்திலும் பனி நிறைந்து காணப்படுகிறது. இந்த மாதிரியான பனிப்பகுதியை படங்களில் மட்டுமே பார்த்த குழந்தைகள் அதில் இறங்கி விளையாடுவது, பொம்மைகள் செய்வதுமாக இருக்கிறார்கள். பாதைகளில் உள்ள பனிகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றி வருகின்றனர். இந்த புயலில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.