உலகில் எலக்ட்ரானிக் ரக வாகனங்கள் மற்றும் விண்வெளித் திட்டப் பயணம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்கிம்ன் டெல்ஸா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதால் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கை பின்னுக்குத்தள்ளிவிட்டு, எலான் மஸ்க் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
மேலும், டெஸ்லாவின் பங்குகள் 475 சதவீதத்திற்கும் அதிகமான உயர்ந்துள்ளதால் அந்நிறுவன்னத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 5 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அதேசமயம் முதல் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் அடுத்ததாக பில்கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் எலான் மஸ்க் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.