தாத்தாவுடன் பேத்தி காதல் திருமணம்

திங்கள், 3 அக்டோபர் 2016 (15:47 IST)
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாத்தா என்று தெரியாமல் அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
 


அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் மூலம் 68 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெகு நாட்களாக இணையதளத்தில் நட்பாக பழகியுள்ளனர்.
 
அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரின் பழைய புகைப்படங்களை எடுத்து பார்த்துள்ளார். 
 
அதில் இவரது கணவர் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. விசாரித்த போது, புகைப்படத்தில் தந்தையுடன் இருந்த கணவர் தன் சொந்த தாத்தா என்பது தெரியவந்தது.
 
இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது:-
 
இளம்பெண்ணின் புகைப்படங்கள் என்னை கவர்ந்து விடுகின்றன. அதுபோன்று இந்த பெண்ணின் புகைப்படமும் என்னை கவர்ந்தது. அதனால்தான் இவளுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன். ஒருவருக்கு ஒருவர் பிடித்து போனதால் தான் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.    

வெப்துனியாவைப் படிக்கவும்