ஜூன் மாதம் முதல் கூகுள் பே ஆப் நிறுத்தம்.. கூகுள் அதிரடி அறிவிப்பு

Siva

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:49 IST)
கூகுள் நிறுவனத்தின் பே ஆப்  என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வரும் நிலையில் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் அமெரிக்காவில் மட்டும் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம் போல் பயன்பாட்டில் இருக்கும் என்றும் எனவே மற்ற நாட்டினர் அச்சப்பட தேவையில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் கூகுள் பே ஆப் சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள்  வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே ஆப் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்