ஜெ.விற்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த ’ரிச்சர்ட் பீலே’ நடிகரா?

செவ்வாய், 3 ஜனவரி 2017 (12:09 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ரிச்சர்ட் பீலே குறித்தான கூகுள் தகவலில், ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்த டாக்டர் ரிச்சர்ட் பீலேயின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.


 

இங்கிலாந்து நாட்டின் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ஜான் பீலே. இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுபவம் வாய்ந்த மருத்துவர் என்றும், நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் திறன் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்ட் பீலே என்பவர் பிரபல நடிகராகவும் உள்ளார். இவர், இரண்டாம் உலகப்போரின்போது ‘ராயல் நேவி’ கப்பலின் லெஃப்டினண்டாகவும் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர், ’வார் அண்ட் பீஸ்’, ’ஸ்பெஷல் பிரான்ஞ்’, ’எ ஹேண்ட்ஃபுல் ஆஃப் டஸ்ட்’ உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரிச்சர்ட் பீலே குறித்தான கூகுள் தகவலில், ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்த டாக்டர் ரிச்சர்ட் பீலேயின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்