ஐஸ். ஐஎஸ். தீவிரவாத தலைவரை துரத்திய ’நாய்’க்கு விருது !

வியாழன், 31 அக்டோபர் 2019 (20:38 IST)
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுறுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதிசிரியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த அல் பக்தாதிபதுங்கி இருந்த சுரங்கப்பாதைக்கு அமெரிக்க ராணுவமும் , அவர்களுடன் ஒரு ராணுவ நாயும் சென்றது.
 
அப்போது அல் பக்தாதி தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதனால் நாய் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அல் பக்தாதி மரணத்திற்கு பெரிதும் உதவியது இந்த நாய் ஆனால் அதன் பெயர் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் மிகப்பெரிய வேலையைச் செய்துள்ளது என புகழாரம் சூட்டினார்.
 
இந்நிலையில் அல் பக்தாதியை அழிக்கும் உதவிய மோப்ப நாயை கௌரவிக்கும் விதமாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் ஒரு போட்டோவை வெளியிடுள்ளார்.
 
அதில், வியட் நாம் நாட்டுக்கு எதிராக அமெரிக்க போர்   நடத்தியபோது, ராணுவ வீரர்கள் 10 பேரை காப்பாற்றியதற்காக வீரர் ஜெம்ஸ் மெக்லொனுக்கு மெடல் ஆப் ஹானர் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தை தான் தற்போது டிரம்ப் போட்டோ ஷாப் செய்து பக்தாதியை துரத்திக் கண்டுபிடித்த நாய் போட்டோவை வைத்துப் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்