நான்கு கிட்னியுடன் வாழும் இளம்பெண் : சீனாவில் அதிசயம்

வெள்ளி, 3 ஜூன் 2016 (12:23 IST)
சீனாவில் ஒரு இளம்பெண் நான்கு கிட்னியுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.


 

 
சீனவை சேர்ந்த இளம்பெண் சியோலின்(17). அவருக்கு சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டார். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
 
அப்போது அவர் உடலை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது சியோலின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பொதுவாக எல்லோர் உடலிலும் 2 சிறுநீரகங்கள்தான் இருக்கும். ஆனால் அந்த பெண்ணுக்கு நான்கு இருந்துள்ளது. ஆனால், அதிகமாக உள்ள அந்த இரண்டு சிறுநீரகங்களால் எந்த பயனும் இல்லை, மேலும் அவற்றை வேறு யாருக்கும் பொருத்தவும் முடியது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
எனவே, அந்த இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். தற்போது சியோலின் நலமாக இருப்பதாக தெரிகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்