இறந்த மனிதர்களை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்லும் ராட்சத பலூன்

வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:41 IST)
மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இறந்தவர்களின் சாம்பலைப் பெற்றுக்கொண்டு ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்கிறது.
 

 
பின்னர் அந்த சாம்பல் 75ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றவுடன், ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்நிறுவனம் இதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகை வசூல் செய்கிறது. பொதுமக்கள், இதனால் இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்புகிறார்கள். இதற்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
 
அதேசமயம், விண்ணில் பரப்பப்படும் சாம்பலால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்குமா? என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த சாம்பல் மழை அல்லது பனித்துளிகளுடன் கலந்து மீண்டும் பூமிக்கு திரும்பும்போது கேடு விளைவிக்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்