அமைதியாய் இரு; நாடு கடத்தப் படுவாய்: தமிழச்சியை எச்சரித்த பிரான்ஸ்

திங்கள், 24 அக்டோபர் 2016 (15:47 IST)
தமிழச்சி என்ற பெயரில் முகநூலில் பரபரப்பு கருத்துகளை கூறி வரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை, அந்நாடு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் உள்ள பெண்மணி, எப்போதும் பரபரப்பு கருத்துகளை கூறி வந்தார்.  சுவாதி வழக்கில், ராம்குமார் குற்றவாளியே அல்ல, உண்மையான குற்றவாளியை காப்பாற்ற போலீசார் முயல்கின்றனர் என்கிற தோனியில் பல பரபரப்பான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
 
உடல் நலக்குறைபாடு காரணமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜெயலலிதா உடல்நிலை குறித்து இவர் போட்ட பதிவு கடும் கண்டனத்திற்கு ஆளானது.  இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை காவல் நிலையங்களில் ஏராளமான புகார்களும் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர் இந்திய சட்டங்களையும் கடுமையாக விமர்சித்தார்.
 
அவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்ட மத்திய அரசு தமிழச்சி மீதான கண்டனத்தை பதிவு செய்தாகவும், இதனால் பிரான்ஸ் அரசு, தமிழச்சியின் இணையத்தளம், மற்றும் தொலைபேசி பேச்சுக்களை கண்காணிக்க ஆரம்பித்ததாகவும் தெரிகிறது.
 
இதன் மூலம், தமிழச்சியின் நடவடிக்கைகளை புரிந்து கொண்ட பிரான்ஸ் அரசு, அந்த நாட்டு காவல் துறைக்கு விரிவான அறிக்கை அனுப்பியதாம். அதன்பின், காவல் துறை தமிழச்சியை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாம். 
 
அமைதியாய் இரு... மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் நாடு கடத்தப்படுவாய் என்று கூறிவிட்டதாம். இதனால்தான் அவர் தற்போது எந்த பதிவும் போடாமல் அமைதியாகி விட்டார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்