முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்

சனி, 31 டிசம்பர் 2022 (16:22 IST)
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் காலமானார்.

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பிறகு போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார்.

16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார். அவருக்குப் பின் போப் பதவிக்கு வந்த போப் பிரான்சிஸ் அவரை அடிக்கடி சென்று சந்தித்து வந்ததாக கூறியுள்ளார்.

"வாட்டிகனில் உள்ளமாத்தர் எக்லெசியா மடாலயத்தில் இன்று காலை 9.34 மணிக்கு 16-வது பெனடிக்ட் காலமானார். கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் தரப்படும்," என்று வாடிகன் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 2-ம் தேதி முதுல் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் 16-வது பெனடிக்ட் உடல் வைக்கப்படும், இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் என்றும் வாடிகன் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்