வெனிசுலா நாட்டில் உணவு பஞ்சம்: போராட்டத்தில் பொதுமக்கள் (வீடியோ)

வியாழன், 16 ஜூன் 2016 (03:40 IST)
வெனிசுலா நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு சாப்பாட்டுக்காக பொது மக்கள் அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.  


 

 
வெனிசுலா நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் உணவுக்காக சண்டை  போடும் நிலை ஏற்பட்டு, சாலையில் போராட்டம் செய்வதோடு பசியால் கொள்ளையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் பசியோடு இருக்கிறோம், எங்களுக்கு உணவு வேண்டும் என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.
 
மேலும் ஒரு நாளைக்கு சுமார் 7 குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது வெனிசுலா நாட்டில் உலகில் உயர்ந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
 
                                            நன்றி: Wall Street Journal
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்