பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (18:17 IST)
ஏரோமொபில் 3.0 என்ற பறக்கும் கார் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
சாலையில் பயணிக்கும் கார் போன்ற அமைப்பை கொண்ட இந்த ஏரோமொபில் 3.0 பறப்பதற்கு ஒரு சுவிட்சை தட்டினால் போதும். அதன்மூலம் இறக்கைகள் கொண்ட காராக மாறி பறக்க தொடங்கிவிடும்.
 
மினி ஹெலிகாப்டர் போல மினி கார். இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த காரின் விலை 1.5 கோடி முதல் ஆரம்பமாகிறது. அடுத்த ஆண்டு முதல் முன்பதிவை தொடங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
சாலை நெரிசலில் இருந்து தப்பி பறந்து செல்லக்கூடிய கார் என்பதால், கட்டாயம் இது அனைவரையும் ஈர்க்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
 
மேலும் இந்த காரை எளிதாக தரையிறக்கவும், பரப்பிலிருந்து வானில் பறக்கவும் முடியும். விமானம் போல் அல்லாமல் ஹெலிகாப்டரைப் போல் இயங்க கூடியது.

வெப்துனியாவைப் படிக்கவும்