பொம்மைக் கல்யாண ஜோடி நிஜமான ஜோடியானது

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:25 IST)
அமெரிக்காவில் சிறுவயதில் மோதிரத்தை கொண்டுவரும் சிறுவனும், பூக்கூடைத் தூக்கிவரும் சிறுமியும் பெரியவர்கள் ஆனபிறகு திருமணம் செய்த கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அமெரிக்காவில் கிறிஸ்தவ திருமணம் நடக்கும் போது, ஒரு சிறுவனுக்கும், சிறுமிக்கும்  மணமகன், மணமகள் போல உடையலங்காரம் செய்வார்கள், மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் மோதிரத்தை சிறுவனும், பூக்கூடையை அந்தச் சிறுமியும் எடுத்து வருவார்கள்.  
 
அப்படி ஒரு உறவினர் திருமனத்தில் தனக்கு ஜோடியாக நடைபோட்ட ப்ரூக் கிப்சன் என்ற சிறுமிக்கு அட்ரியன் என்ற அந்த சிறுவன் மீது சிறுவயதிலிருந்தே ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இப்படியே பதினேழு வருடங்கள் கடந்தது.
 
போன வருடம் கிப்சன் தன் காதலை தெரிவிக்க, அட்ரியனும் அதை ஏற்றுக் கொண்டார். பொம்மை ஜோடி இப்போது நிஜ ஜோடியானது.

வெப்துனியாவைப் படிக்கவும்