கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு!

செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:17 IST)
நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்கள் வெளியாகியுள்ளது.
 
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பகுதிகளிலும் வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது.
 
சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை (மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படங்கள்) வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்