போனில் பேசுவதை ஒட்டுகேட்டு விளம்பரம் செய்யும் ஃபேஸ்புக்!

புதன், 1 நவம்பர் 2017 (15:35 IST)
ஃபேஸ்புக் தான் பேசுவதை எல்லாம் விளம்பரமாக டைம் லைனில் காட்டுவதாக அமெரிக்கர் ஒருவர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.


 


 
அமெரிக்கர் ஒருவர், தான் என்னவெல்லாம் பேசுகிறாரோ அதை ஃபேஸ்புக் விளம்பரமாக டைம் லைனில் காட்டுவதாக கூறி ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் அளிக்க உள்ளார். இதேபோல் பலரும் ஃபேஸ்புக் தாங்கள் பேசுவதை கேட்பதாக சில காலங்களாக கூறி வருகின்றனர்.
 
நாம் எதைப்பற்றி அதிகம் பேசுகிறோமோ அதைப்பற்றி ஃபேஸ்புக் நமக்கு விளம்பரங்களாக காண்பிப்பதாக கூறப்படுகிறது.
 
 
இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வித்தியாசமான விளக்கம் கொடுத்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நாம் பேசும் விஷயங்களை கூட ஃபேஸ்புக் கண்காணிப்பதாக புகார் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக பெண் ஒருவருக்கு வித்தியாசமாக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 
பல மொழிகள் தெரிந்த அவருக்கு, அவர் போனுக்கு அருகில் எந்த மொழியில் பேசியிருக்கிறாரோ அந்த மொழியில் அவருக்கு விளம்பரம் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் அவரது மொழி ஆங்கிலத்தில் இருந்துள்ளது. மேலும் சிலர் ஃபேஸ்புக், நாம் பேசுவதை போனில் மைக் மூலமாக கேட்டு அதை வைத்து விளம்பரம் தருவதாக புகார் கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பிரிவில் இருக்கும் ராப் கோல்ட்மேன் என்பவர், நாங்கள் இதுவரை போனில் இருக்கும் மைக்கை விளம்பரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்தியது இல்லை. ஃபேஸ்புக் லைவ் வீடியோக்கள், வீடியோ கால், போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மைக் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்