யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த பேரணியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்த பேரணியில் பெருந்திரளான மக்களுடன், வடமாகண விவசாய அமைச்சர், மீன்பிடி அமைச்சர், சட்டசபை உறுப்பினர்கள், அனைத்து தமிழ் தேசிய கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட மக்கள் எமது நிலம் எமக்கு வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களே வெளியேறுங்கள்,ஆக்கிரமிப்பு இராணுவம் எமக்கு வேண்டாம், எங்கள் பண்பாட்டை சீரழிக்காதே, தமிழ் காணிகளை விட்டு இராணுவமே வெளியேறு, ஒற்றையாட்சி தீர்வு ஒருபோதும் வேண்டாம், தென்னிலங்கை மீனவர்களே எங்களது கடலைவிட்டு வெளியேறுங்கள், ராணுவத்தின் ஆக்ரமிப்பு எங்களுக்கு வேண்டாம், சிங்கள புத்த ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் போன்ற முழக்கங்களை எழுப்பினர்.