செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்: உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

Mahendran

சனி, 20 ஜனவரி 2024 (12:50 IST)
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
 
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் "பிரிசெப்ட்" என்ற ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.
 
பிரிசெப்ட் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோஸ் என்ற பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தி வரும் நிலையில்,  அந்தப் பள்ளத்தாக்கில், நீர் ஆதாரங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
பிரிசெப்ட் ரோவர், ஜெசெரோஸ் பள்ளத்தாக்கில் உள்ள மண்ணில் உள்ள நீரின் அளவை அளவிடும் சோதனைகளை நடத்திய நிலையில் அந்த சோதனைகளின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிமீ தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பதாகவும், இவை உருகினால் அந்த கிரகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
 
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்