நாயாக வாழ்ந்தது போதும்.. கரடியாக மாறப் போகிறேன்! – ஜப்பான் அதிசய மனிதனின் அடுத்த ஆசை!

Prasanth Karthick

திங்கள், 27 மே 2024 (16:43 IST)
சமீபத்தில் ஜப்பானில் தன்னை முழுவதுமாக நாயாக மாற்றிக் கொண்டு பலரையும் ஆச்சர்யப்படுத்திய நபர் தற்போது தான் கரடி உள்ளிட்ட வேறு விலங்குகளாக மாற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.



பலரும் பல வித விலங்குகளை காண்பதும், ரசிப்பதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற நபர் ஒருபடி மேலே போய் நாய்கள் மீதான ஈர்ப்பால் தன்னை நாயாகவே மாற்றிக் கொண்டார். இதற்காக ரூ.12 லட்சம் செலவு செய்து தனது உடலமைப்பில் மாற்றங்கள், மேலே நாய்களை போன்ற செயற்கை தோல் என பொருத்தி முழு நாயாக தன்னை மாற்றி கொண்டிருந்தார். அந்த சமயம் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் டோகொ தற்போது வேறு விலங்காக மாற விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தற்போது தான் நாய்களை போலவே கை, கால்களை மாற்றுவதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும், நாயாக மாறுவதற்காக அவருக்கு அமைக்கப்பட்ட ரோமங்களில் அழுக்கு படிந்தால் அதை சுத்தம் செய்ய நிறைய உழைப்பை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் நாயில் இருந்து வேறு விலங்காக மாற விரும்புவதாகவும், கரடி, பூனை, நரி போன்ற மிருகங்களாக மாற விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்