இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

புதன், 11 மார்ச் 2020 (10:18 IST)
england minister
சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான் உள்பட பல நாடுகளில் தினந்தோறும் வைரஸ் தாக்கத்தால் உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றது.
 
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே 9 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளதாகவும் 250 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் என்பவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண் அமைச்சர் நாடின் டோரிஸ் கலந்து கொண்டபோது தான் அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
மேலும் அமைச்சர் நாடின் டோரிஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை செய்ய இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்