தாமதமான சாவடிகளில் நேர நீட்டிப்பா? – மாநில தேர்தல் ஆணையர் விளக்கம்!

சனி, 19 பிப்ரவரி 2022 (12:23 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தாமதமாக தேர்தல் தொடங்கிய சாவடிகளில் நேரம் நீட்டிக்கப்படாது என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வாக்குசாவடிகளில் காலை முதலே வாக்கு எந்திரம் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது. பின்னர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கால தாமதம் ஆன வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் “இயந்திரக் கோளாறு காரணமான தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய இடங்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது. அனைத்து சாவடிகளிலும் ஒரே நேர அளவே பின்பற்றப்படும். வாக்குவாதம், அசம்பாவிதங்களை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்