நேற்று புனேவில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் கடைசிநேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் ஆட்டநாயகன் விருது 95 ரன்கள் சேர்த்த சாம் கரனுக்கும், தொடர்நாயகன் விருது ஜானி பேர்ஸ்டோவுக்கும் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர்நாயகன் விருது புவனேஷ்வர்குமாருக்கும் வழங்கப்படாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் தாக்கூர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசினார் புவனேஷ்வர் குமார்.